Skip to content

மாரடைப்பால் கணவன் சாவு… மனைவி தற்கொலை- 3 குழந்தைகள் பரிதவிப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிவா-ஷர்மிளா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு சஞ்சூஸ்ரீ,மது ஸ்ரீ, என்ற 2 பெண் குழந்தைகளும் வேல்அமுதன் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கணவர் சிவா விவசாயக் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 19ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடுமையான நெஞ்சுவலியின் காரணமாக சிவா உயிரிழந்தார். இந்த நிலையில் கணவரின் திடீர் இழப்பால் தாங்க முடியாத துயரத்திலும் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கணவர் வாங்கிதந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென கணவர் உயிரிழந்த  துக்கம் தாங்க முடியாமல் மனைவி ஷர்மிளா அவர் வாங்கி கொடுத்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதன் துக்கம் தாங்க முடியாமல் தந்தை வாங்கி கொடுத்த சேலையால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தாயும் தந்தையும் இழந்து 3 குழந்தைகளும் பரிதவிப்பிற்கு உள்ளாகி இருப்பது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!