Skip to content

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Authour

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கு.ராமகிருட்ணன்:-
மேதகு பிரபாகரன் தமிழர்களை உலகம் முழுவதும் அறிய செய்தவர் என்றும் இலட்சியத்திற்காக 15 வயதில் போர் தொடங்கி ஆயுதம் எடுத்து தமிழீழ விடுதலையை மக்கள் போராக நடத்தி உலகம் அறிய செய்தவர்.உலகம் முழுவதும் தமிழர்களுக்கு தமிழனுக்கு இடம் உண்டு என்று நாமக்கல் கவிஞர் பாடியதை வேலுப்பிள்ளை பிரபாகரன் செயலில் காண்பித்தார்.அவரது பிறந்தநாளான இன்று தமிழீழ விடுதலை அடைந்தே தீருவோம் என்றும் தமிழருக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!