Skip to content

உன் வீட்ல ஒரூ ரூபாய் கூட இல்ல- எதுக்கு இத்தனை சிசிடிவி… திருடன் குமுறல்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மத போதகர் ஜேம்ஸ் பால். இவரது மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஜேம்ஸ் பால் அவரது மனைவி குடும்பத்துடன் தனது மகளை பார்க்க மதுரைக்குசென்ற போது, அவர் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.

வீடு பூட்டபட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ப நபர் அந்த வீட்டுக்குள் புகுந்து, அதிக மதிப்புள்ள பொருட்கள் மற்றும் தங்க நகைகள் , பணம், வெள்ளி உள்ளிட்டவை இருந்தால் அனைத்தையும் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து யாரும் இல்லாத நேரம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளார். திருட வந்த மர்ப நபர் எதிர்பாராத அதிர்ச்சியுடன் சந்தித்தார். அவர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை முழுமையாக தேடியும், நகை, பணம் எதுவும் இல்லாமல் இருந்தது.

இதனால் அந்த மர்பநபர் விரக்தியடைந்து உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த சுவற்றில் “திருட வரும் திருடனுக்கு கொஞ்சம் காசு வச்சுட்டு போங்க :””வீட்டுல காசு இல்ல; இத்தனை சிசிடிவி கேமரா எதுக்கு ??” “இனி என்னைப் போன்று திருட வரும் திருடனுக்கு கொஞ்சமாவது காசு வைத்து விட்டு செல்லுங்கள் இப்படிக்கு திருடன்” என எழுதி வைத்துள்ளார்.
 

இதனையடுத்து மதுரையிக் இருந்து வீடு திரும்பிய மத போதகர் ஜேம்ஸ் பால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சுவற்றில் எழுதப்பட்டு இருப்பதை பார்த்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுயில் பாதுக்காப்பு பலபடுத்தப்பட்டு உள்ளது. தற்பொழுது, திருடன் எழுதுவைத்து சென்ற கடிதம் இணையத்தில் வைரலாகி வருபது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!