Skip to content

“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

  • by Authour

சென்னை திருவேற்காடு அருகே அமைக்கப்பட்ட தனியார் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் ஒன்றை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாடி அவர் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வேறு கட்சிக்கு செல்கிறாரா? அதிமுக வலுவிலக்காதா போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால் தேர்தல் நேரத்தில் இதுபோன்று கட்சி மாறும் செய்திகள் வருவது இயல்புதான் என்று தெரிவித்தார். அதேசமயம் திமுக கூட்டணி தேர்தலை சந்திக்க வலுவான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். 

திமுக அமைச்சர் ஒருவர் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், காங்கிரஸ் தரப்பில் ஒரு குழு அமைத்து திமுகவிடம் கூட்டணி கொடுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் மழையால் சற்று தாமதம் அடைந்தது, ஆனால் தற்போது வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார். திமுகவிடம் தேர்தலில் சீட்டுகள் கேட்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அவர்கள் தரப்பில் முடிவு எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார். வாக்குத் திருட்டில் ஈடுபட்டும் மகளிர் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியும் வடக்கு இடங்களில் வலுவாக இருப்பது போன்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது என்று விமர்சித்தார்.

error: Content is protected !!