திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மட்டும் பான் கார்டை பயன்படுத்தி புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக 9 கோடி ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டும் என கூறி அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கலைவாணி இன்று திருச்சி மாநகர சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார்.

