துணை முதல்வர் , மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர திமுக சார்பில் பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சிஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் 11குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன்
நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராசு, மாவட்ட அமைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம் பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

