Skip to content

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

  • by Authour

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் இஸ்லாம்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் போலீசார் ஷர் கோபால்பூர் பகுதியில் சோதனை நடத்தியபோது உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்த 12 பேர் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினர் 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!