வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் டிட்வா புயல் கரையை நெருங்குவதால் புதுச்சேரியில் கடும் சீற்றத்துடன் கடல் கொந்தளிக்கிறது. அலைகளின் ஆக்ரோஷத்தால் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாபு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

