திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீர் அகமது, லதா ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- .
என்.எஸ்.பி ரோடு, மெயின் கார்டு கேட் பகுதியில் நாங்கள் 10 முதல் 40 வருடங்களாக சட்டப்படி அமைதியாக, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தரைக்கடை வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் இந்

த வியாபாரத்தை மட்டுமே வைத்து நடைபெற்று வருகிறது.ஆனால் சமீபத்தில் அதிகாரிகள் தரைக்கடை வியாபாரிகளின் இசைவு இல்லாமலும், எந்த விசாரணை இல்லாமலும் தரைக் கடைகளை காலி செய்ய உத்தரவு கூறி, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.சட்ட விதிகளுக்கு புறம்பாக தரைக்கடை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தி, விசாரணை நடத்தி, எங்களுக்கு எந்த இன்னல்களும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்ட பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், திருச்சி மாநகராட்சி வென்டிங் கமிட்டி தலைவர் ஆகியோரை சந்தித்தும் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் கலெக்டர் சரவணனை சந்தித்து மனு கொடுக்க தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 12 மணிக்கு வந்தனர்,அப்போது தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் திரண்டு வந்ததால் போலீசார் மொத்தமாக செல்ல அனுமதிக்க முடியாது.பிரதிநிதிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூறினர்.இதையடுத்து தரைக்கடை வியாபாரிகள் உள்ளே அனுமதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் கலெக்டரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மொத்தமாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்திற்கு பின் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கைகளை முறையிட்டனர்.கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகளின் மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

