Skip to content

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார்.

கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே மாறியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கூறிய விமர்சனம் குறித்து அவர், “யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னைப்

பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், கோபி செட்டிபாளையத்தில் ‘வெற்றி விழா நடத்துவோம்’ என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்… பாருங்கள்,” என்று கூறினார்.

error: Content is protected !!