Skip to content

அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

  • by Authour

அரியலூர் நகரில் புறவழிச் சாலையில் வருகிற ஐந்தாம் தேதி அரியலூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம் அரியலூர் ரிதன்யா மஹாலில் நடைபெற்றது.போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, அரியலூர் மாவட்ட கழகத்தின் நீண்டகாலக் கனவான ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்தும், கழக

இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் முழுவதும் 120 கூட்டங்கள் நடத்தி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்தும் மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்தும் ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,கழக சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கழக மேற்பார்வையாளர்களுடன் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கழக சட்ட திட்ட குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் கணேசன், லதா பாலு, அருங்கால் சந்திரசேகர், மற்றும் ஒன்றிய நகர கிளைக் கழக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!