புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கம் மாவட்ட செயலாளர் கதிர்வேல் சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.
மனுவில் கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் கடந்த 27.09.2025 அன்று வேலுச்சாமிபுரத்தில் நடைபெறுவதற்கு முன்பாகவே, 24.03.2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று அரசியல் கட்சி மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் போன்ற கூட்டங்கள் நடத்த ஏதுவான

இடங்களை கலந்தாலோசித்து கரூர் நகரத்திற்கு நான்கு இடங்களை தேர்வு செய்யப்பட்டது. விஜய் பரப்புரை செய்யப்பட்ட வேலுச்சாமிபுரம் இந்த நான்கு இடத்தில் ஒரு இடம் தான். மேலும் விஜயனி பரப்புரை நடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலுச்சாமிபுரத்தில்தான் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் பங்கேற்று பரப்புரை செய்தார்.
அப்போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை, விஜய் அவர்களின் கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் காலை 10.00 மணி முதல் ரசிகர்கள் வர தொடங்கினர். ஆனால் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்களுக்கான எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யவில்லை. மேலும் அங்கு மைக் செட் ஒலி பெருக்கி மற்றும் லைட் மட்டும் தான் அமைத்திருந்தனர். விஜய் மதியம் 12.00 மணிக்கு வேலுச்சாமிபுரத்திற்கு வருதாகவும் அறிவிக்கப்ட்டிருந்த நிலையில் மாலை வரை பரப்புரை

செய்யப்படும் இடத்திற்கு வரவில்லை. இதை டிவியில் பார்த்து கொண்டிருந்த கரூர் மாவட்டம் அருகில் இருந்தவர்களும் விஜயை பார்க்க வர தொடங்கினர். மேலும் விஜய் நாமக்கலில் இருந்து புறப்படும் போது விஜயின் வாகனத்தை பின் தொடாந்து ரசிகர்கள் வந்தார்கள். இதையெல்லாம் கூட்டத்தை ஏற்படு செய்தவர்களும், விஜய் வாகனத்துடன் வந்த த.வெ.க கட்சி நிர்வாகிகளும் தடுக்கவும் இல்லை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது

