கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவி அருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிக அளவில் மாலை அணிந்து பக்தர்கள் ஆழியார் கவியருவிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்

காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆழியார் கவி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அருவிக்கு வரும் நீரின் அளவு சீரானதை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

