Skip to content

கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  • by Authour

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் – தொழிலாளி கொலையிலும் தொடர்பு அம்பலம் !!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு தொழிலாளி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.

கோவை விமான நிலையம் அருகே காரில் தனது காதலனுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பீளமேடு காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற கருப்பசாமி, அவருடைய தம்பி காலீஸ்வரன் என்ற கார்த்திக், குணா என்ற தவசி ஆகியோரே போலீசார் சுட்டு பிடித்தனர்.

காயம் குணம் அடைந்த பிறகு அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் குற்ற சம்பவங்கள் விவரம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்செயல், தடயங்கள் வாக்குமூலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்று உள்ளன.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்ற பத்திரிக்கை இதுவாகும், அடுத்த கட்டமாக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றனர், கைதான மூன்று பேருக்கும் நீதிமன்ற காவல் இன்று முடிவடைகிறது. இதனால் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். இதற்கு இடையே மூன்று பேரையும் பீளமேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்பொழுது கோவில்பாளையம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. அதாவது குரும்பபாளையத்தை சேர்ந்த தேவராஜ் கடந்த மாதம் இரண்டாம் தேதி செரப்பாளையம் பகுதியில் உள்ள காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அங்கு இருந்த சதீஷ், கார்த்திக், தவசி ஆகியோர் மது குடித்தனர், இதை பார்த்த தேவராஜ் இங்கு ஏன் ? அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என்று கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறு ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் கட்டையால் தேவராஜை அடித்து கொலை செய்து உள்ளனர். இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பாளையம் போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்கான விரைவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!