புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அங்கு பார்த்த போது அஷ்ரப் அலி (25) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று உறையூர் பகுதியில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சந்தோஷ்குமார் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
காவிரி ஆற்றில் டூவீலரில் மணல் கடத்தியவர் கைது
பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது இருசக்கர வாகனத்தில் காவிரி ஆற்றில் மணல்களை திருடிக்கொண்டு மூன்று பேர் செல்வதை போலீசார் பார்த்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது அதில் 2 பேர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பிறகு போலீசார் மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருவெறும்பூர் சர்க்கார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து,திருட்டு மணலையும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேவதான பகுதியை சேர்ந்த திருப்பதி, சத்தியராஜ் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதியவர் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (55). இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். இந்நிலையில் வீட்டிலிருந்து அவர் வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் வாசுதேவன் எடமலைபட்டிபுதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
கொத்தனார் மயங்கி விழுந்து சாவு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவர் திருச்சியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணியன் நேற்று சம்பவ இடத்தில் மயங்கி இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்.. 2 பேர் கைது
திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராம் ( 26). இவர் பஞ்சு கிடங்கு மதுரை வீரன் மாரியம்மன் கோவில் முன்புறம் தனது போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது நசீர் (48 ,சாரதி ( 19 ) ஆகியோர் அவரிடம் தகராறு செய்து அவரை மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது நசீர் மற்றும் சாரதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர் .மேலும் இந்த சம்பவத்தில் 36 வயது பெண்மணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணமகனின் தந்தையிடம் ரூ. 40 ஆயிரம் பணம் திருட்டு.. 2 பேர் கைது
திருச்சி சோமரசம்பேட்டை கீழ வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52)
இவரது மகனுக்கு நேற்று முன்தினம் உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவுகளுக்காக ரவிச்சந்திரன் தனது சட்டை பாக்கெட்டில் ரூபாய் 40 ஆயிரம் பணத்தை வைத்திருந்தார். பின்னர் சட்டையை கழற்றி வெளியே வைத்துவிட்டு அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பொன்மலை மேல அம்பிகாபுரம் நேருஜி தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (50), உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (46 )ஆகிய 2 பேரும் ரவிச்சந்திரன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து பணத்தை மீட்டனர் .
போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அதான் குடி பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் ( 48 ). பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து பெரிய கருப்பனை கைது செய்தனர்.

