Skip to content

திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதி

  • by Authour

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்குப் பதற்றம் நிலவியது.

தீபம் ஏற்ற வந்த மனுதாரர்கள் மற்றும் பா.ஜ.க., இந்து முன்னணிஅமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர். மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

error: Content is protected !!