வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளை (டிசம்பர் 5) சென்னை , திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை தாக்கம் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. வங்கக் கடலில் உருவான டித்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் மிச்சங்கள் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகவும் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால், முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மாவட்டம் வானிலை சீரடையும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

