தனியார் நிறுவன காவலாளி திடீர் சாவு
திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜெயலட்சுமி தனது மகன் நவீன் உதவியுடன் பாத்ரூமை திறந்து பார்த்தபோது அங்கு மயங்கி கிடந்தார். பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுந்தர்ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
காரில் கஞ்சா கடத்திய ரவுடி கைது
திருச்சி கே.கே. நகர் போலீஸ் எஸ்ஐ சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் திருச்சி – புதுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள வடுகப்பட்டி ஜங்ஷன் கோரையாற்று பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சைகை காட்டி நிறுத்த முயன்றனர். ஆனால் அந்தக் கார் அங்கு நிற்காமல் புறப்பட்டு சென்றது. உடனே உஷாரான போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காருக்குள் சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .பின்னர் போலீசார் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த கருமண்டபம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் என்கிற முத்தமிழ் குமரன் (36) என்பவரை கைது செய்தனர். தற்போது கே.கே நகர் ஓலையூர் மெயின் ரோடு பாரி நகர் விரிவாக்கம் பகுதியில் வசித்து வரும் குமரன் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு புகுந்து அரிவாள் முனையில் தாக்குதல்–2 பேர் கைது
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ( 23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (19 )என்பவரது தாயாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கருணா மூர்த்தி கல்லாங்காடு ஸ்ரீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகிய இரண்டு பேரும் விக்னேஷின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அவரை அரிவாள் முனையில் தாக்கிவிட்டு வெளியே சென்றனர். பின்னர் அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் டயர் மற்றும் சீட் அவர்களை கிழித்து விட்டு தப்பிச் சென்றனர் இது தொடர்பாக விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருணாமூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா கைது செய்தார். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

