கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது.
தேர்தல் வாக்குறுதி படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7வது ஊதிய குழுவில் நிதி பலன்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு போராடியவர்களுக்கும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 80-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

