தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள அரசடி கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
மறுநாள் காலை, இறுதிக்கட்ட சடங்குகளைச் செய்வதற்காகக் குடும்பத்தினர் சுடுகாட்டிற்குச் சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, உடல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாயமான சடலம் இன்னும் ஆழத்தில் உள்ளதா அல்லது நரபலி கொடுப்பதற்காக யாரேனும் தோண்டி எடுத்துச் சென்றனரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

