Skip to content

சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. 20 லட்சம் கேட்டு தம்பதி தொல்லை

  • by Authour

பெங்களூரில் ஆசையாக நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் புதிதாக கட்டும் கனவு இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்த 10 பக்க கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும்ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய உஷா நம்பியார் – சசி நம்பியார் என்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ப்ரூக்போங்க் லேஅவுட்டில் வசித்து வந்தவர் முரளி கோவிந்தராஜூ. சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் ஐடிபிஎல்லில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெர் துர்கா தேவி. இந்த தம்தபதிக்கு கனிஷ்டா, தேஷிடா என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 2018 ம் ஆண்டில் முரளி நல்லூரஹள்ளியில் நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று காலை அந்த வீட்டுக்கு தச்சு தொழிலாளி கணேஷ் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் உள்ளே ஃபேன் மாட்டுவதற்காக சிலிங்கில் இருந்த இரும்பு கொக்கியில் முரளி தூக்கில் பிணமாக தொங்கினார். உடனடியாக அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் முரளி தூக்கிட்டு தற்கொலை செய்து வந்தது தெரியவந்தது. அதோடு அவர் தற்கொலைக்கு முன்பாக 10 பக்கத்தில் கடிதம் எழுதி வைத்திருப்பதும் கிடைத்தது. அதில் புதிதாக வீடு கட்டுவதற்கு பெங்களூர் வளர்ச்சி வாரிய அதிகாரிகள் மற்றும் இன்னும் சிலர் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் முரளியின் தாய் லட்சுமி கோவிந்தராஜூ பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் போலீசில் புகாரும் அளித்தார். அதில், ‛‛கடந்த அக்டோபர் 25ம் தேதி உஷா நம்பியார் (57), சசி நம்பியார் (64) என்ற தம்பதி என் மகனை சந்தித்தனர். மொத்தம் 10 முதல் 15 முறை சந்தித்தனர். அவர்கள் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். என் மகன் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் பெங்களூர் வளர்ச்சி வாரிய அதிகாரிகளை அழைத்து வந்து மிரட்டினர். கட்டுமான பணிக்கு இடையூறு செய்வதாக தெரிவித்தனர். இதனால் என் மகன் மனதளவில் பாதிக்கப்பட்டான். இதனால் அவன் காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு புதிதாக கட்டும் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்துள்ளான். சம்பந்தப்பட்ட உஷா நம்பியார், சசி நம்பியார் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டப்பபிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் 308 (மிரட்டி பணம் பறித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் சசி நம்பியார் – உஷா நம்பியார் என்ற தம்பதியை கைது செய்தனர். அந்த தம்பதியின் மகன் வருணைபோலீசார் தேடுவருகின்றனர்.

error: Content is protected !!