Skip to content

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • by Authour

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம், அதன் நிலையான மேலாண்மை, அரிப்பைக் குறைத்தல், மண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக மண்ணைப் பாதுகாப்பு, மண்

ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் பசுமைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் மற்றும் ஆசிரியர் ஜெரால்ட் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் வேளாண்மை அலுவலர் ராசி பிரியா மாணவர்களுக்கு மண் பரிசோதனை செய்து காட்டி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து வேளாண் துறை சார்பில் நடமாடும் மண் பரிசோதனை பேருந்து மூலம் மண் வகைகள், மண் பரிசோதனை கருவிகள், மண்வள அட்டை போன்றவைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

error: Content is protected !!