பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் தரமான வேட்டி, சேலைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் “பொதுமக்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது. 17 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை எடப்பாடி கூறுகிறார்.
நிர்ணயித்த அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ள 13 லட்சம் வேட்டி, சேலைகள் நிராகரிப்பு. நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேட்டி, சேலைகளுக்கு பதிலாக சுமார் 3 லட்சம் வேட்டி, சேலைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

