Skip to content

SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன.

குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் திடீர் மரணமும், தற்கொலையும் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில் தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணன் (வயது 35) நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

பி&டி காலனியை சேர்ந்த சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். 

error: Content is protected !!