ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர கிலோமீட்டர் ஆகும் இங்கு யானை கரடி சிறுத்தை, புலி,கருச்சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுமாடு உள்ளிட்டவைகள் மற்றும் அபூர்வ வகை தாவரங்கள் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல தமிழ்நாடு டிராக் என்ற நடைமுறை இருந்து வருகிறது இந்நிலையில் உலாந்தி வனசரகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள பண்டார வரை மலைப்பகுதியில் பெண் புள்ளி ஒன்று தனது நான்கு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் உள்ளது மேலும் புலிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி
- by Authour

