நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘அரசன்’ படத்தின் பூஜை வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன்

உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் புரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் கடை திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த சிம்பு பேசியதாவது:
வரும் டிச.9ஆம் தேதி மதுரையில் அரசன் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள,இங்கிருந்து நான் நேரடியாக மதுரைக்குச் செல்கிறேன் என்றார்.

