Skip to content

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

  • by Authour

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியுள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து 400 ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ. 57 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ.18,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் விலை தற்போது ரூ. 26,700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

error: Content is protected !!