Skip to content

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கரூர் திருச்சி செல்லும் சாலையில் தெற்கு நரசிம்மபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

அதே பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான

கட்டிடத்தில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கட்டிடத்தில் திடீரென மொட்டை மாடியில் இருந்த பால்கனி கான்கிரீட் தளம் இடிந்து கீழே விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின்சாரத்துறை உதவியுடன் மின்சாரத்தை துண்டித்த பிறகு இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவர் இடிந்த நேரத்தில் மருத்துவமனை திறக்காததாலும், பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறிப்பாக தனியார் மருத்துவமனை அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் இதேபோல் பழமையான வீடுகள் மட்டும் கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!