அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் உத்திராபதி (55) மற்றும் கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை மகன் ராஜகோபால் (43) ஆகிய இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

