அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு அரியலூர் மாவட்ட

ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு முகாம் நடைபெற்றது.
இத்தேர்வு முகாம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் அருள்

முருகன் மற்றும் ஊர்க்காவல்படை வட்டார தளபதி ஜீவானந்தம் மேற்பார்வையிட்டனர்.
இம்முகாமில் 87 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி அளவீடும் பணி நடைபெற்றது. ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் இத்தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

