Skip to content

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கும் , தூய்மை பணியாளருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!