அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது மருதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறமாக இருந்த

விஜயலட்சுமி என்பவரது ஓட்டு வீட்டின் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த விஜயலட்சுமி, கார் ஓட்டி வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின்னர். இதில் கார் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் ஓட்டு வீட்டின் முன் பக்கம் சேதம் அடைந்தது. விபத்து குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கார் ஓட்டு வீட்டில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

