Skip to content

ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனக்கு லைசன்ஸ் எடுக்க அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த மணி பாரதி என்பவரிடம் விண்ணப்பம் செய்தார். அப்போது அவர் லைசன்ஸ் எடுப்பதற்கு முன்னதாக எல் எல் ஆர்(பழகுணர் உரிமம்) எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன்
வழக்கு பதிவு செய்து இன்று ஆய்வாளர் மணிபாரதியைப் பிடிக்க திட்டம் தீட்டினர் பின்னர் ரசாயனம் தடவிய பணத்தை பழனியப்பனிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் பழனியப்பன் சென்று திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதியை சந்தித்து ரூ 1000 லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமும் புரோக்கரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிபட்ட மணி பாரதியின் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர் அப்பொழுது அவரது அறையில்உள்ள மேஜையில் ரூ
13,000 பணம் கைப்பற்றப்பட்டது
அதனை லஞ்ச ஒழிப்பு போலீசார்
பறிமுதல் செய்தனர். திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!