திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சுகுமார், மகன் லத்திஸ் காயமடைந்தனர். இந்தநிலையில் வச்சலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

