நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

