Skip to content

மத்திய அரசை கண்டித்து.. த.மா.வி.தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக ‘புஸ்யா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ என்று பெயர் சூட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து,கரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் பாலன் தலைமையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகத்தான திட்டத்தின் பெயரையாருக்கும் தொடர்பில்லாத புரியாத பெயருக்கு மாற்றுவது, கிராமப்புற மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல்,மகாத்மா காந்தி திட்டத்தின் பெயரை மாற்றாதே, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்காதே, புதிய பெயரிடும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!