Skip to content

போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த 5 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 56 கிராம் எடை கொண்ட மெத்த பெட்டமைன் மற்றும் 4 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மேற்கண்ட போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவர்கள் மதுரையை சேர்ந்த சுந்தர பாண்டியன் (24), நடராஜ் (25). பெங்களூருவை சேர்ந்த தவசி (24). ராணிப்பேட்டையை சேர்ந்த கிஷோந்த் குமார் (24), குடியாத்தத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!