Skip to content

வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன. இந்தநிலை இன்றும் தொடர்கிறது.

அதன் அடிப்படையில் சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, வாரணாசி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி செல்ல வேண்டிய 4 விமானங்கள், டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, ஐதராபாத், அகமதாபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

error: Content is protected !!