Skip to content

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்துள்ளார். இதில் வட மாநிலத்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் டிக்கெட் இன்றி பயணித்தது தெரியவந்தது.

இதையடுத்து, டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணித்த வட மாநிலத்தவர்கள் 80 பேருக்கும் தலா 300 ரூபாய் விகிதம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒருசிலர் அபராதத்தை கட்டிய நிலையில் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் அபராதத்தை கட்டாமல் ரயில் ராமேஸ்வரம் வந்த உடன் அதில் இருந்து இறங்கி தப்பியோடினர். அபராதத்தை கட்டாமல் சென்ற வடமாநில பயணிகளை ரயில்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தாமல் அவர்களை விட்டுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!