Skip to content

குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பேராயர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது…

சமூக நல்லிணக்கத்தை 100% பாதுகாப்போம். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கதை விதைக்கும். வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை

வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.

பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்தையும் ஒன்றாக கொண்டாடுவது தமிழ்நாடு. துரோகிகளை வென்றவர் குறித்த பைபிள் கதையை மேற்கோள்காட்டினார் விஜய்.

ரோஜாப்பூ கொடுத்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார் விஜய். பின்னர் சாண்டா கண்ணாடி அணிந்து குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுடன் கொண்டாடினார் விஜய். பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய விஜய். கிறிஸ்துமஸ் விழாவில் விஜயை தவெக தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.

error: Content is protected !!