Skip to content

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!