புதுக்கோட்டை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்ம நாதர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடந்து வருகிறது. 2ம்நாளான வியாழக்கிழமை ஸ்ரீ
மாணிக்கவாசகர் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்து வீதி உலா நடந்தது. திரளான மக்கள் வழிபட்டனர்.

