Skip to content

2026-ல் மீண்டும் இணையும் முன்னாள் ஊழியர்கள்-கூகுள் அதிரடி

2025ம் ஆண்டில் கூகுள் புதிதாகப் பணியமர்த்திய AI மென்பொருள் பொறியாளர்களில் 5-ல் ஒருவர் (சுமார் 20%) அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வெளியேறியவர்கள் ஆவர்.

ஓபன்ஏஐ , மெட்டா, மற்றும் ஆந்தோபிக் போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அனுபவம் வாய்ந்த திறமையாளர்களைத் திரட்ட கூகுள் இந்த வியூகத்தைக் கையாண்டுள்ளது.

கூகுளின் துணை நிறுவனர் செர்ஜி பிரின் நேரடியாகவே பல முன்னாள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏன் முன்னாள் ஊழியர்கள்? புதியவர்களுக்குப் பயிற்சியளிப்பதை விட, நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் ஏற்கனவே தெரிந்த முன்னாள் ஊழியர்கள் பணியில் சேர்ந்தவுடன் மிக வேகமாகச் செயல்பட முடியும் என்பது கூகுளின் கணிப்பாக உள்ளது.

ஒருபுறம் 2023 மற்றும் 2024-ல் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைக் கூகுள் பணிநீக்கம் செய்தாலும், மறுபுறம் AI மற்றும் கிளவுட் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு மட்டும் தேர்ந்தெடுத்த பழைய ஊழியர்களை மீண்டும் அழைத்து வருகிறது.

மீண்டும் வரும் ஊழியர்களுக்கு மற்ற நிறுவனங்களை விடக் கூடுதல் ஊதியம் மற்றும் கூகுளின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘பூமராங் கலாச்சாரம்’ மீண்டும் திரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் பல முன்னாள் ஊழியர்கள் கூகுளில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!