Skip to content

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு எல்லாமே நன்றாக இருக்கும். சனி அற்புதமாக இருக்கும் காலகட்டம். தைரியமாக இருக்கலாம். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். பிரிந்த பெற்றோர்கள், உறவினர் ஒன்று சேரும் யோகம் ஏற்படும்.

நிலம், வீடு, நகை வாங்கும் யோகம் அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். அதிமாக நகை வாங்குவது, முதலீடுகள் செய்வது, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற யோகங்கள் ஏற்படும். பெரிய அளவுக்கு முதலீடுகளைச் செய்வீர்கள். அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்கள் துர்க்கையை பிடித்துக் கொள்வது மேன்மையை ஏற்படுத்தும். வழிபாடு துர்க்கை கவசம் கேட்பது, சொல்வது நல்லது. பிரசித்திபெற்ற துர்க்கை கோயில்களுக்குச் செல்வது, பட்டீஸ்வரம், கனகதுர்க்கம், வனதுர்க்கா, காளி துர்க்கா போன்ற கோயில்களுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். பெண் தெய்வ வழிபாடுகளைச் செய்வது நல்லது. அபிராமி அந்தாதி நூற்பயின் சொல்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். திருமண தடை நீங்கும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வது, கேட்பது நன்மை. திருமணத் தடைகள் நீங்கும். தைரியம் பிறக்கும். ஆனாலும், ஏதோவொரு மன அழுத்தம், சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும். குலதெய்வ கோயில்களுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். குலதெய்வ கோயில்களுக்கு போகாத ரிஷப ராசியினருக்கு நல்லதெல்லாம் தடைபடும். அதே நேரத்தில் சில ஏற்றங்களும் காணப்படும்.

சொத்து பிரச்சனை தீரும்

உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பூர்வீகத்தில் இருந்த சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். குடும்பத்தை விட்டு தொலைத்தூரத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் அமைப்பு ஏற்படும். விவாகரத்து வரை சென்ற தம்பதி மீண்டும் ஒன்று சேரும் அமைப்பு ஏற்படும். கவனம் மன அழுத்தம் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஜீரண உறுப்புகளில் கவனமாக இருக்காவிடில் கண்டிப்பாக மன அழுத்தம் ஏற்படும். அதை சரி செய்யாவிடில் மன அழுத்தம் நீங்காது. ஏதாவது ஒரு குழப்பம், கவலை இருந்து கொண்டே இருந்துவிடும் என்பதால் கவனம் தேவை.

error: Content is protected !!