புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்கள்
பக்தர்களால் 26ம் ஆண்டு ஐயப்ப ரத ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி படத்தை அலங்கரித்து சுப்பிரமணியர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியாக உலா வந்தது. திரளான ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். குருசாமி ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தலைமை வகித்து நடத்தினார். நிறைவில் அறுசுவை அன்னதானம் நடந்தது.

