புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் திருக்கோகர்ணம் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தம்பதியர்களுக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாலை அணிவித்து வேஷ்டி, சேவைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகரமேயர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழு த்தலைவர் தவ.பாஞ்சாலன்,மாநகராட்சி கவுன்சிலர் கனகம்மன்பாபுமற்றும் அறநிலையத்துறையின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

