காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம்
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.
கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த அக்பர் அலி
காவிரி ஆறு கம்பரசம் பேட்டை படித்துறையில் குளிக்க செல்வதாக கூறி சென்றார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து மனைவி ஜெரினா பேகம்
காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அக்பர் அலியை தேடி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மர் பேட்டரி திருடிய 3 வாலிபர்கள் கைது
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய டிரான்ஸ்பார்மர் என்று உள்ளது. அதிலிருந்து 2 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது பற்றி மலைக்கோட்டை தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி கோட்டை போலீஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி பீமநகர் ஜி.எம்.மஹால் ஜக்கரியா திரு பகுதியைச் சேர்ந்த பிரதிபிராஜ் (29),பீமநகர் பென்சனர் தெரு அப்துல் ரகுமான் (26, தென்னூர் ஆழ்வார் தோப்பு இப்ராஹிம் (29)ஆகிய மூன்று பேரும் சேர்ந்து டிரான்ஸ்பார்மர் பேட்டரிகளை குறிவைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் உறையூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 24 பேட்டரிகள் கைப்பற்றப்பட்டது.
வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி
திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி ( 53. ). வெல்டிங் தொழிலாளி இவர் திருச்சி தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் கடந்த சில நாட்களாக வெல்டிங் வேலை செய்து வந்தார் பின்னர் அங்கு ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் போடும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்தார் இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது சக தொழிலாளிகள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் பழநி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சக தொழிலாளி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

