Skip to content

மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28ம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.
ஏரோஸ்கேட்டோபால், ஒரு நிமிட ஸ்கேட்டிங் ரேஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஜிக்-ஜாக் போட்டிகளில் திருச்சி, திண்டுக்கல், மதுரை என 11 மாவட்டங்களிலிருந்து 350-க்கும் அதிகமான ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை பெற்று

வெற்றி வாகை சூடினர்.தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில் செயலாளர் பிரவீன் ஜான்சன் ஒருங்கிணைப்பில் பொருளாளர் தங்கமுருகன் மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் பயிற்சியாளர் அமல் ஜோயல் ஒன்றிணைந்து இவ்விளையாட்டு போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தி சிறப்பித்தனர்.

இப்போட்டிக்கு ஏகேஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கி சிறப்புரையாற்றி சிறப்பித்தார்.மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 4-ஆம் இடம், மதுரை 3-ம் இடம், திண்டுக்கல் 2-ஆம் இடம் மற்றும் திருச்சி மாவட்டம் முதல் இடத்தை கைப்பற்றினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகள் அடுத்த இரு மாதங்களில் மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்படுவர்.

error: Content is protected !!