Skip to content

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் ஒரு டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்த வேன் முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மீது லேசாக உரசவே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தைச் சீர்செய்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!