திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 20 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏராளமான துவரம் பருப்பு மூட்டைகள் நெடுஞ்சாலையிலும் பள்ளத்திலும் சிதறி விழுந்தன.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாலையில் பருப்பு மூட்டைகள் சிதறிக் கிடந்ததாலும், விபத்துக்குள்ளான பேருந்து நின்றதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

